மேடையில் 'வைரல் பாடகர்' திருமூர்த்தியைப் பாடவைத்த டி.இமான் - . இமானின் பாடல்கள்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ரத்தின சிவா இயக்கியுள்ள படம் 'சீறு'. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், 'வேல்ஸ் பிலிம்ஸ் வேலை செய்வது சொந்த வீட்டில் இருப்பது போல் இருக்கும். 'சீறு' படத்தில் தான் பணியாற்றிய அனுபவமும் இதுபோன்றுதான்.நான் இப்போது இசையைத் தவிர, பிற இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். விரைவில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவேன். 'சீறு' படத்தில் பாடிய பின் திருமூர்த்தி தற்போது வெளிநாடுகளில் சென்று பாடும் அளவிற்குப் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தில் திருமூர்த்தியைத் தவிர வேறு, இரண்டு புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளேன். அவர்களில் ஒருவர் பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவன். சங்கர் மகாதேவன் மகனாக இருந்தாலும் திறமை தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை சங்கர் மகாதேவன் மகனும் திருமூர்த்தியும் ஒன்று தான்' என்றார்.