ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் சாயிஷா பேபி - ரௌடி பேபி சாயிஷா
சாயிஷா - ஆர்யா நடிப்பில் டெடி திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும் கன்னட மொழியில் யுவரத்னா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே டான்ஸ் பயிற்சி மேற்கொண்டுவரும் சாயிஷா, தற்போது ஸ்ரீதர் மாஸ்டருடன் இணைந்து ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். சாயிஷாவின் இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.