விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 'சார்பட்டா' டான்சிங் ரோஸ் - vijay's vaathi coming
நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங்' பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டைய கிளப்புகிறது. குறிப்பாகத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம குத்தாட்டம், போட்ட காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.