அட நம்ம சாரா அலிகானா இது! - வாய்ப்பிளக்கும் இணையவாசிகள் - சாரா அலிகான்
பாலிவுட் நடிகை சாரா அலிகான் நடிப்பில் கேதர்நாத், சிம்பா என்று இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இவர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள சாரா அலிகானுக்கு, எப்படி தனது ரசிகர்களை கவரவேண்டும் என்று நங்கு தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் சாரா அலிகான் தனது உடல் எடை அதிகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட காணொலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அவர் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது அந்தக் காணொலி வைரலாகப் பரவிவருகிறது.