எனக்கு அவ்வளவாக பாட வராது - இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் - டைட்டானிக் காதலும் கவுந்து போகும்
திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சிவி வி குமார் தயாரிக்கும் படம் 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்'. அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன், ஒரு இன்டிபென்டன்ட் இசையமைப்பாளராக சினிமா துறையில் வருவதற்கு ஆறு வருடங்களாக காத்திருந்தேன். எலக்ட்ரானிக் மியூசிக் மட்டுமே எனக்கு தெரியும். அவ்வளவாக பாடவும் வராது. அப்படிப்பட்ட நான் நார்த் மெட்ராஸ் பாடல்களை அமைத்தேன் என்று அட்டகத்தி படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.