'நேர்மறையான சிந்தனைகளை மட்டும் பரப்புங்கள்'- ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி - s p balasubramaniam video on rumors about janaki death
சில நாள்களாக பழம்பெரும் பாடகி ஜானகி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் வெளியானது. இதை நம்பி பலரும் ஜானகி இறந்துவிட்டாரா எனக் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் ஜானகி உயிரிழக்கவில்லை என்றும் அது வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இதுபோன்று சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே பரப்ப வேண்டும் என அறிவுறுத்தியும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காணொலி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.