'காடன்' படத்தில் நடித்தது 10 'பாகுபலி' படத்தில் நடித்தற்கு சமம் - ராணா டகுபதி - காடன் வெளியாகும் தேதி்
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். இப்படத்தின் இசை, டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ராணா கலந்துக்கொண்டு பேசுகையில், பாகுபலிக்குப் பிறகு நல்ல படத்தில் நடிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். 'பாகுபலி'யில் ராஜமௌலி என்னை பேரரசனாக காட்டினார். காடன் படத்தில் பிரபு சாலமன் என்னை காட்டில் விட்டுவிட்டார். 'பாகுபலி' படத்தில் கடினமாக உழைத்து இருப்பதாக ராஜமௌலியிடம் கூறினேன். ஆனால் இப்போது 'காடன் 'படம் நிறைவடையும்போது 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று உணர்ந்தேன் என்று ராஜமௌலியிடம் கூறினேன் என்றார்.