அரங்கம் அதிர்ந்த ராதாரவியின் 'அல்டி' கலாய் பேச்சு! - ராதாரவி
எம்ஜே.உசைன் இயக்கத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி கதாநாயகனாக அறிமுகமாகும் மர்ம திரில்லர் திரைப்படம் ‘அல்டி’. மேலும் இவருடன் மனிஷா ஜித், சென்றாயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ராதாரவி பேசிய காமெடி பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது.