'கோடீஸ்வரி' நிகழ்ச்சி பெண்களின் மனஉறுதியை வளர்க்கும் - நடிகை ராதிகா - கோடீஸ்வரி நிகழ்ச்சி
வெள்ளித்திரை - சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்த ராதிகா தற்போது தொகுப்பாளினியாகவும் வலம் வரஇருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியைத் தற்போது கோடீஸ்வரி என்னும் நிகழ்ச்சியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி பிரத்யேகமாக பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. 'கோடீஸ்வரி' நிகழ்ச்சி பெண்களின் மனஉறுதியை வளர்த்துக்கொள்வதற்கான நிகழ்ச்சி என நடிகை ராதிகா கூறியுள்ளார்.