ஹீரோவாக்கிய தயாரிப்பாளர்களை ஹீரோக்கள் மறக்க கூடாது - தயாரிப்பாளர் கே ராஜன் - தயாரிப்பாளர் கே ராஜன்
இயக்குநர் மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்' இசைவெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், சில ரசிகர்கள் 1000 ரூபாயில் டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசை கண்டிப்பதும் பிறகு மன்னிப்புக் கேட்பதும் தற்போது நடைமுறையில் இருக்கிறது. பல கோடி போட்டு படம் எடுத்துவிட்டு ஆயிரக் கணக்கில் டிக்கெட் வாங்குகிறார்கள், இவர்கள் எப்படி மக்கள் தலைவனாக இருக்க முடியும்?யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அஜித்தை சோழா பொன்னுரங்கம் எனும் தயாரிப்பாளர் கதாநாயகனாக்கினார். தற்போது அவர் சிரமத்தில் இருக்கிறார்.ஆனால் அஜித் ஸ்ரீதேவி கணவருக்கு படம் நடித்து கொடுக்கிறார், இதன் மூலம் அஜித் கணக்கில் சில கோடி ரூபாய் வருமானம் சேரும். கதாநாயகர்கள் தங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றார்.