'இமையழகி' பிரியா வாரியரின் கலக்கல் பேட்டி - ஸ்ரீதேவி பங்களா
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் இவரின் கண் இமை சிமிட்டல் காட்சியால் ஒவர் நைட்டில் ஒபமா ஆனார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் ட்ரெய்லரில் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இப்படத்தை வெளியிடக்கூடாது என்று போனி கபூர் வழக்கு தொடர்ந்தார். தற்போது கன்னட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதுகுறித்து தனது அனுபவத்தை ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.