'மிரட்சி' இசை வெளியிட்டு விழாவில் விஜய் பாணியில் குட்டி கதை சொன்ன ஜீவா - மிரட்சி வெளியாகும் தேதி
கிருஷ்ணா இயக்கத்தில் டேக் ஓகே கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகும் படம் 'மிரட்சி'. இந்தப் படத்தில் நடிகர் 'ஜித்தன்' ரமேஷ் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவருடன் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த இனாஹா, அஜெய்கோஸ், சாய் சனா, நிகிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 'ஜித்தன்' ரமேஷ், இனாசஹா, இயக்குநர் ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.