'மாஸ்டர்' ரிலீஸ்: திருவிழாக் கோலமான திரையரங்கம்! - விஜய் சேதுபதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.13) அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ஆட்டம்பாட்டத்தோடு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல நாள்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.