லாலேட்டனின் பிறந்தநாள்: நூறு ஓவியங்களைச் சுவற்றில் வரைந்த ரசிகர்! - லாலேட்டனின் பிறந்தநாள்
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால். அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லாலுக்குப் பல தரப்பினரும், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தச் சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் மெடினா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மோகன்லாலின் பல கதாபாத்திரங்களின் 100 ஓவியங்களைச் சுவற்றில் வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக, தான் கருதுவதாகத் தெரிவித்த அவர், தன்னுடைய ஓவியங்களை மோகன்லால் காண வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.