பத்ம பூஷண் விருது பெற்ற பாடகி சித்ரா: நன்றி தெரிவித்து வீடியோ - ks chithra thanks people for padma bhushan
பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நன்றி தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொலியில் " எனக்கு இது இசை உலகின் 42ஆவது ஆண்டு பயணம். இந்த நேரத்தில் எல்லாம் வல்ல கடவுள், எனது பெற்றோர், குருக்களின் ஆசீர்வாதத்தை நினைத்து பார்க்கிறேன். மேலும் இதை சாத்தியமாக்கிய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களை நினைவில் நிறுத்துகிறேன். இறுதியாக என் வாழ்க்கையில் என்னை முன்னோக்கி நகர வைத்தது ரசிகர்களின் பிரார்த்தனைகளும் அன்பும்தான். நம் மக்களுக்கும், நமது தேசத்துக்கும் தலைவணங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.