'சுல்தான் பட கதை கேட்டு புல்லரித்தது’ - கார்த்தி நெகிழ்ச்சி - karthi movies
நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று(மார்ச் 24) சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஷ்மிகா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கார்த்தி, சுல்தான் பட கதை கேட்டு தனக்கு புல்லரித்தது என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.