‘தலைவி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தேம்பி தேம்பி அழுத கங்கனா! - Kangana news
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தலைவி திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்னா ரனாவத், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தலைவியின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று (மார்ச் 23) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை கங்னா ரணாவத், தான் நடித்த திரைப்படங்களின் இயக்குனர்கள் எவரும் தலைவி படத்தின் இயக்குனர் விஜய் அளவிற்கு மரியாதையாக தன்னை நடத்தியதில்லை எனக் கூறினார்.
Last Updated : Mar 23, 2021, 4:21 PM IST