'தளபதி' தலைப்பு கணபதியாக கேட்டது - ரஜினியிடம் என்ன சொன்னேன் தெரியுமா? - கமல்ஹாசன் பிறந்தவிழா கொண்டாட்டம்
கலையுலகில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். தனது தந்தை சீனிவாசன், குருநாதர் பாலசந்தர் ஆகியோருக்கு சிலை திறந்து வைத்து அவர், தனக்கு சொந்தமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும் திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அனைவரையும் பாராட்டி பேசியுள்ளார். மேலும், ரஜினிக்கும், தனக்குமான நட்பு பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளார்.