கடமான்பாறை குழுவினருடன் கலகல பேட்டி - mansoor alikhan
நடிகர் மன்சூர் அலிகான் எழுதி இயக்கும் படம் 'கடமான்பாறை' இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மேலும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.