மேடையில் படத்தின் தலைப்பை மறந்த ஜாக்குவார் தங்கம் - ஜாகுவார் தங்கம்
அறிமுக இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் IPC375. டர்ன் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் இக்குறும்படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில் IPC375 குறும்பட வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் நடிகரும், இயக்குநருமான ஜாக்குவார் தங்கம் கலந்துகொண்டு மிகவும் நகைச்சுவையாகப் பேசினார்.