பாலு சீக்கிரமா எழுந்து வா... உனக்காக காத்திருக்கிறேன் - இளையராஜா உருக்கம்! - இளையராஜா
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை (ஆக.14) எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Aug 15, 2020, 3:46 AM IST