திருக்குறளிலிருந்து எடுத்த 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' - இளையராஜா
கமல் நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காம ராஜன்' படத்தில் இடம்பெற்ற 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல் தற்போது சந்தானம் நடிப்பில் வெளியான 'டிக்கிலோனா' படத்தில் ரீமேக் செய்யப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது. இப்பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா தற்போது கூறியுள்ளார். இந்தக் காணொலி யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் காணொலி தற்போது நெட்டிசன்களைக் கவர்ந்துவருகிறது.