எம்.என். நம்பியார் ஒரு சிறந்த ஆன்மீகவாதி: இளையராஜா புகழாரம் - இளையராஜா புகழாரம்
சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் வேளைகளில், நடிகர் எம்.என். நம்பியார் தேனி லோயர் கேம்ப்பில் உள்ள தனது பங்களாவில் தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும், இப்போது அந்த பங்களா வேத பாடசாலையாக மாறியிருப்பது தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருகிறார். சென்னையில் நடைபெற்ற எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய இளையராஜா இதனை நினைவுகூர்ந்தார்.