ஏவிஎம் ஸ்டூடியோவிலிருந்து சட்டையை பிடித்து வெளியேற்றப்பட்டேன் - பாரதிராஜா பகிர்ந்த நினைவுகள் - சர்வர் சுந்தரம் நினைவுகளை பகிர்ந்த பாரதிராஜா
1960களில் நாகேஷ் நடிப்பில் வெளியான 'சர்வர் சுந்தரம்' படத்தை ரிலீஸுக்கு முன் ஏவிஎம் ஸ்டூடியாவில் பார்க்க வாய்ப்பு கிடைத்தபோது, தன்னை படம் பார்க்கவிடாமல் சட்டையைப் பிடித்து வெளியேற்றிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சந்தானம் நடிப்பில் டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதாக இருந்ததால் பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சுமூகமான முறையில் தீர்த்தபின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு பேசியுள்ளார்.