அசுரன் படத்தில் நான் நிறைவாக பணியாற்றவில்லை - வெற்றிமாறன் - அசுரன் படம் பற்றி வெற்றிமாறன்
”இந்தப் படத்தில் சமூக நீதிக்கான உரையாடல் இருந்தது. எனவே மக்களிடையே அதுபற்றி விவாதம் ஏற்பட வேண்டுமென நினைத்தோம். அது நடந்ததை படத்தின் வெற்றியாக பார்க்கிறேன். அசுரன் படத்துக்கு நான் செய்த பணி எனக்கு நிறைவாக இல்லை. ஆனாலும் படத்திலுள்ள குறைகளை மன்னித்து மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். படத்தின் எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாதபோதிலும், அசுரன் தானவே உருவாக்கி கொண்டது” என்று இயக்குநர் வெற்றிமாறன் படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்.