ஐயப்பன் தரும் இந்த விருதைப் பெற நான் பாக்கியமானவன் - இளையராஜா - சுவாமி ஐயப்பன்
இசையில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் கலைஞருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசால் ’ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது இளையராஜா பேசுகையில், சுவாமி ஐயப்பன் கேரள அரசு மூலம் இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளார். ஐயப்பன் தரும் இந்த விருதை பெற நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன் என்றார்.