இன்றைய வலி நாளைய வலிமை! - ஹரீஷ் கல்யாண் உடற்பயிற்சி காணொலி
பொறியாளன், பியார் பிரேமா காதல் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயர் எடுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்த ஹரீஷ் கல்யாண் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைக்க முயன்றுவருகிறார். தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது.