தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கல்லூரி மாணவராக ஜி.வி. பிரகாஷ்: புதிய படத்தின் பூஜை ஆரம்பம்! - வெற்றிமாறன்

By

Published : Sep 13, 2019, 11:33 AM IST

நடிகர் ஜி.வி. பிரகாஷின் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா, முக்கிய கதாபாத்திரத்தில் வாகை சந்திரசேகர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவப் பருவத்தில் கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்சனைகளை ஆக்ஷன் கலந்து காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராகும் இந்தப் படத்தின் பூஜை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.இப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details