'ஃப்ரோசன் 2' பத்திரிக்கையாளர் சந்திப்பு! - ஸ்ருதிஹாசன் ஃப்ரோசன் 2 பிரஸ் மீட்டிங்
ஃப்ரோசன் 2 தமிழ் பதிப்பில் எல்சா கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் டப்பிங் கொடுத்துள்ளார். எல்சாவின் சகோதரி ஆனா கேரக்டருக்கு நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி டப்பிங் பேசியுள்ளார். இதற்கு பாடலாசிரியர் விவேக் வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன், பாடலாசிரியர் விவேக், நடிகை திவ்யதர்ஷினி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினர்.