கலையுலகத்தை சேர்ந்தவர்கள் நடிகர் சங்கத்திற்கு நிதியுதவி வழங்குங்கள் - நடிகர் உதயா வேண்டுகோள் - நடிகர் உதயா வேண்டுகோள்
நடிகரும் முன்னாள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினருமான நடிகர் உதயா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், கண்ணுக்கு தெரியாத கரோனா வைரஸ் உலகத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில், கலையுலகமும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. பல முன்னணி கலைஞர்கள் மத்திய மாநில அரசுகளுக்கும், ஃபெப்சி போன்ற கலையுலக அமைப்புகளுக்கு உதவியதற்கு எங்களது மனமார்ந்த நன்றி.அ தேநேரத்தில், அமைப்பு சாரா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் உதவும் வகையில், நடிகர் சங்கத்திற்கும் நிதி வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.