தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'கரோனா பரவலைத் தடுக்க பொறுப்பா இருங்க...மாஸ்க்கை சரியா போடுங்க' - வெற்றிமாறன் - வெற்றி மாறன் படங்கள்

By

Published : May 17, 2021, 8:16 PM IST

சென்னை: நடிகர் நித்திஷ் வீரா கரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 45. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெற்றி மாறன் நித்திஷ் வீராவுக்கு இரங்கல் தெரவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நண்பர் நித்தீஷ் வீரா உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது இரண்டு நாள்களில் குணமாகிவிடுவார் எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று காலை அவர் இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். போன வருடம் கரோனா தூரமா இருந்த ஒரு விஷயம். இந்த வருடம் கரோனா நமக்கு அருகில் இருக்கு. மாஸ்க்கை தயவு செய்து சரியாகப் போடுங்கள். மாஸ்க்கை சரியாகப் போடுவதால் 70 விழுக்காடு தொற்று பரவலைத் தடுக்க முடிகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டும் தொற்று வருகிறது. ஆனால், அதில் நுரையீரலின் தாக்கம் குறைவாக இருக்கிறது. தயவு செய்து அனைவரும் பொறுப்பாக இருங்கள்" என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details