'அனைவரும் ஒன்று கூடி எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ - எஸ்ஏசி கோரிக்கை - sa chandrasekar recent video
கரோனா தொற்றிலிருந்து எஸ்பிபி மீண்டு வரவேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆயிரம் நிலவே வா என்று ஆயிரம் நிலவுகளை கூட்டிக்கொண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எஸ்பிபி, அவர் மீண்டும் மைக் முன்பு நின்று லட்சம் நிலவுகளை அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆகவே, இறைவா எஸ்பிபியை கூட்டிக்கொண்டு வந்து மைக் முன்பு நிறுத்து என்று நாம் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தால் இது நடக்கும் என்று நம்புகிறேன். நாளை (ஆக.20) மாலை 6 மணிக்கு உலகமெங்கும் உள்ள அன்பு நெஞ்சங்கள் ஒன்று கூடி எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறினார்.