மெளனமாக உறங்கி கிடக்கும் எஸ்.பி.பி. மீண்டும் பாட பிரார்த்திப்போம் - கே.எஸ். ரவிக்குமார் - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்
மொழி, மதம், இனம், தெய்வ நம்பிக்கை என அனைத்துக்கும் அப்பாற்பட்டு நல்ல நண்பராக திகழ்பவர் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம். ஒவ்வொருவரின் வீடுகளிலும் நாள்தோறும் ஒரு பாடல் மூலமாக ஹாய் செல்லும் அவர், பாட முடியாமல் மெளனமாக உறங்கி கிடக்கிறார். அவரை தட்டி எழுப்பி பழைய பாவணையுடன் மீண்டும் பாட ஆகஸ்ட் 20ஆம் தேதி மனதார அவர் நல்லபடியாக இருக்கவேண்டும் என கூட்டுப்பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.