இயக்குநர் சிகரத்தின் சிலையை திறந்து வைத்த சீடர்கள்! - இயக்குநர் கே. பாலச்சந்தரின் சிலை திறப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ராஜ்கமல் இண்டர்நேஷனல் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். பாலச்சந்தரின் மகள், இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து போன்ற முக்கிய திரையுலக பிரபலங்கள் சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.