'ராஜாவுக்கு செக்' படத்தை பெண் குழந்தைகளைப் பார்க்க வைப்பது பத்து புத்தகங்கள் படித்ததற்கு சமம்! - சேரன் - இயக்குநர் சேரன் பேச்சு
'ராஜாவுக்கு செக்' படத்தை உங்கள் வீட்டு பெண் குழந்தைகளைப் பார்க்க வைப்பது அவர்களுக்கு பத்து புத்தகங்களைப் படிக்க கொடுத்ததற்கு சமமாக இருக்கும். இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்னைகளும் நம் கூடவே வந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது என்று இயக்குநர் சேரன் பேசியுள்ளார்.