முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா!
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்து. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் தவித்து வருவதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காவது அரசு அனுமதி தர வேண்டும் என்று இந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அக்கோரிக்கையை ஏற்ற, தமிழ்நாடு அரசு வரும் 11ஆம் தேதி முதல் சினிமா, சின்னத்திரையின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது. இதற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.