வன்முறைகளை குறைத்துக்கொள்ளுங்கள்! - இயக்குநர்களுக்கு அறிவுறுத்திய பாரதிராஜா
நடிகர் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் யோகேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'தமிழரசன்'. இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ராதா ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பாரதிராஜா, படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி குறித்தும், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும் தனது கருத்தினை பகிர்ந்துகொண்டார்.