'சப்பாக்' விளம்பர நிகழ்வில் தீபிகா படுகோனே! - பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே
'சப்பாக்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், அதன் விளம்பர நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கவர்ச்சியான உடை அணிந்து வந்து கலந்துகொண்டார். மேலும், அவரைச் சூழ்ந்த ரசிகர்கள், தீபிகாவுடன் விதவிதமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது, தன்னைப் புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவரின் மொபைல் போனை வாங்கிப் பார்த்துவிட்டு மொபைல் கவர் அருமையாக உள்ளது என புன்னகையுடன் கூறினார்.