யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்க ஆசைப்படும் இயக்குநர் சேரன் - சேரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சேரன் பேசுகையில், இது எனக்குப் புது அனுபவமாக இருக்கிறது. படைப்புகளை முதலில் கணிப்பது பத்திரிகையாளர்கள்தான். நான் இதுவரை 23 படங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பாரதி கண்ணம்மா படத்தை கொண்டாடியது நீங்கள்தான். நிறைய நல்ல படங்கள் காணாமல்போகின்றன. நானும் ஒரு யூ-ட்யூப் ஆரம்பித்து இந்தச் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.