தேசிய விருது பெற்ற அசுரன் படக்குழுவினரின் நன்றி தெரிவிப்புக் கூட்டம் - சினிமா செய்திகள்
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில், நடிகை அம்மு அபிராமி, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நிதீஷ் வீரா, மூணார் ரமேஷ், கென் கருணாஸ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும் படம் குறித்து பேசியதுடன், படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.