'என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது' - 'அசுரன்' வெற்றிமாறன் - அசுரன் இயக்குநர் வெற்றிமாறன்
அசுரன் 100ஆவது நாள் விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், ”2003ஆம் ஆண்டு முதல் தனுசுடன் பயணிக்கிறேன். தனுஷ் எப்போதுமே இயக்குநர்களின் நடிகர். அசுரனின் கதாபாத்திரம் மீது அவருக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தில் மற்றவர்கள் நடித்திருந்தால் அது வேறு மாதிரி இருந்திருக்கும். ஒரு படத்தை இயக்கத் தொடங்கியவுடன் நான் என் சொந்த வாழ்விலிருந்து விடுப்பு எடுத்து விடுவேன். எப்பொழுதும் எனக்கு உடன்பாடான விசயங்களை மட்டுமே நான் எப்போதும் செய்வேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி ஒரு செயலையும் செய்ய வைக்க முடியாது அதற்கு நான் உடன்படவும் மாட்டேன்” என்றார்.