அசுரன் 100ஆவது நாள் கொண்டாட்டம் - அசுரன் மஞ்சு வாரியார்
நான்காவது முறையாக இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகிய படம் 'அசுரன்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்திருந்தார். வி. கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.இப்படம் ரசிகர்களிடமும் திரைப்பிரபலங்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல திரை விருதுகளையும் பெற்றுவருகிறது. இதனையடுத்து, இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதையடுத்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.