'குயின்' அறிமுக விழாவில் ரம்யா கிருஷ்ணன் பேச்சு - குயின் இணையத் தொடர் அறிமுக விழாவில் ரம்யா கிருஷ்ணன் பேச்சு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து கௌதம் மேனன் இயக்கும் இணைய தொடர்தான் 'குயின்'. இந்த இணைய தொடரின் அறிமுக விழாவானது இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், "இந்தக் கதை எனக்குப் பிடித்ததால்தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். வசனங்களை உச்சரிப்பது பிடித்துள்ளது. கௌதம் மேனன், பிரசாத் இருவரும் எனக்கு உதவியாக இருந்தனர். இந்த இணைய தொடரைப் பொறுத்தவரை பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.