நான் நன்றாக இருக்கிறேன் - ராதாரவி - கோத்தகிரி வீட்டில் ராதா ரவி தனிமைப்படுத்தல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைகாட்டி பகுதியில் நடிகர் ராதாரவிக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு கடந்த 10ஆம் தேதியன்று தனது உறவினர்கள் எட்டு பேருடன் அவர் வந்துள்ளார். இதனயைடுத்து கோத்தகிரி வட்டாட்சியர், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் சென்று ராதாரவியை மருத்துவ பரிசோதனை செய்தனர். பின் அவரை 14 நாள்கள் தனிமையில் இருக்கும்படி கூறிய அலுவலர்கள் ராதாரவி வீட்டுச் சுவரில் தனிமைப்படுத்தப்படவர்களுக்கான ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். தற்போது, தான் நன்றாக இருப்பதாக கூறி ராதா ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.