'விவேக்கின் ரசிகன் நான்' - கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த வடிவேலு! - கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த வடிவேலு
என்னுடைய நண்பன் விவேக் மாரடைப்பின் காரணமாக இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரும் நானும் நிறைய தமிழ்ப் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். நடிகர் விவேக் குறித்து பேசும்போது எனது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அவருக்கு இருக்கும் எத்தனையோ கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள இரங்கல் காணொலியில் தெரிவித்துள்ளார்.