’எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பு எப்போதும் கலகலப்பா இருக்கும்’ - சிங்கம் புலி - எம்ஜிஆர் மகன் வெளியாகும் தேதி
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’எம்ஜிஆர் மகன்’. ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிங்கம்புலி, ”ஜூனியர் நடிகையுடன் நான் டிக்டாக் செய்து வீட்டில் மூன்று நாள் பிரச்னையானது. அதே சமயம் டிக்டாக்கில் இருந்து வந்த பிரபலம் இப்போது நடிகையாக மாறியுள்ளார். எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பில் எல்லோரும் ரொம்ப கலகலப்பா இருப்போம்” என்றார்.