'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'- சமையலில் களமிறங்கிய சிம்பு! - Simbu cooks non vegetarian
ஊரடங்கு உத்தரவு காரணமாக, வீட்டில் இருக்கும் திரையுலகப் பிரபலங்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து ரசிகர்களிடம் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிம்பு என்ன செய்கிறார் என்பது மட்டும் தெரியவே இல்லை. இந்நிலையில் சிம்பு ஊரடங்கு நேரத்தில் என்ன செய்கிறார் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு தனது அம்மா, அப்பாவிற்கு அசைவ உணவு சமைத்து கொடுக்கிறார். அப்போது அவர் தனது வருங்கால மனைவியை எப்போதும் சந்தோஷமாக பார்த்து கொள்வேன் என்றும், அவரை சிரமப்பட விட மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.