'நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் தனக்கு அதிர்ச்சியாக இருந்தது' - ரோபோ சங்கர் உருக்கம்...! - நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணமடைந்ததை அடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இரக்கல் தெரிவித்து நடிகர் ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோவில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன் வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.