குடியுரிமை சட்டம் குறித்து ராதா ரவி சர்ச்சை பேச்சு - குடியுரிமை சட்டம் குறித்து ராதாரவி கருத்து
நடிகர் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகிவரும் 'தமிழரசன்' திரைப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு திரையுலகினரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தனது கருத்தை பதிவு செய்தார். மேலும் குடியுரிமை பிரச்னை குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.