உதவி கேட்ட லாரன்ஸ் - சத்தமே இல்லாமல் உதவி செய்த பார்த்திபன் - சென்னை நியூஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் 'தாய்' என்று ஒரு குழு ஆரம்பித்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரையுலக பிரபலங்களிடம், நிதி திரட்டி வருகிறார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், லாரன்ஸின் முயற்சிக்கு, கைகொடுக்கும் வகையில் 1000 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினார். அவரைத்தொடர்ந்து தற்போது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் 1000 கிலோ அரிசி மூட்டைகளை லாரன்ஸிடம் கொடுத்துள்ளார். இதை பார்த்திபன், தனது வீடியோ பதிவில் உறுதி செய்துள்ளார்.